Hindenburg-ன் எக்ஸ் பதிவு... `தலைவலி மேல் தலைவலி’ - சிக்கலில் SEBI தலைவர் மாதபி புச்? News - 14/08/2024
Description
மீண்டுமொரு ஆய்வறிக்கையை வெளியிட்டு, இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது ஹிண்டன்பர்க் நிறுவனம். கடந்த முறை அதானி நிறுவனத்தை மட்டும் குறிவைத்துக் குற்றம்சாட்டிய ஹிண்டன்பெர்க், இந்த முறை இந்தியப் பங்குச் சந்தையின் அஸ்திவாரமாக இருக்கும் செபி அமைப்பின் (இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம்) தலைவர் மீதே குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறது!
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியத் தொழிலதிபர் கெளதம் அதானி பங்குச் சந்தையில் முறைகேடு செய்திருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. கெளதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, பெர்முடா, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் முறைகேடாக சில நிறுவனங்களில் பங்குகளை வைத்திருந்ததாகவும், இந்தியப் பங்குச் சந்தையில் அதானி குழுமப் பங்குகளின் விலையை மறைமுகமாக உயர்த்தி முறைகேடு செய்ததாகவும் முதல் அறிக்கை குற்றம்சாட்டியிருந்தது ஹிண்டன்பர்க்.